Saturday, April 8, 2017
Friday, March 24, 2017
Tuesday, March 21, 2017
Monday, March 20, 2017
Tuesday, March 7, 2017
Wednesday, February 15, 2017
விமர்சனம் - பார்த்திபன் கனவு (புதினம்)
நாவல் பெயர்- பார்த்திபன் கனவு
ஆசிரியர்- கல்கி கிருஷ்ணமூர்த்தி
கதாபாத்திரங்கள்- பொன்னன், வள்ளி, பார்த்திபன், விக்ரமன், அருண்மொழிதேவி, மாறப்பதேவர், நரசிம்மவர்மன், சிவனடியார்,
குந்தவி, பரஞ்சோதி முனிவர்
கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களால் கல்கி இதழில் தொடராக வெளியிடப்பட்டு பின்பு புத்தககமாக வெளியிடப்பட்ட புதினம் பார்த்திபன் கனவு. இதில் நரசிம்மவர்மன், பரஞ்சோதி முனிவர், யுவாங் சுவாங் போன்ற வரலாற்று கதாபாத்திரங்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்த கதையின் கருவாக இருப்பது "தந்தையின் கனவை நிறைவேற்றுதல்"மற்றும் சில குறிப்புகளும் கதையில் கருவுடன் பயணிக்கின்றன அவை,
➤ தாய் நாட்டை மீட்டல்
➤ கொடுத்த வாக்கை நிறைவேற்ற தவிக்கும் தாய்
➤ காதலியை கைப்பிடித்தல்
➤ மூடநம்பிக்கையும் போலி சாமியாரும்
என பல சுவாரசியமான சம்பவங்களை கதையில் இணைத்துள்ளார் கல்கி.
ஒரு காலத்தில் பேரரசாக விளங்கிய சோழப் பேரரசு பல்லவர்களுக்கு அடிமையான நாடாகிப் போனது. பல்லவர்களுக்கு கப்பம் கட்டும் சுதந்திரம் அற்ற ஒரு குறுநில அரசானது. சோழ அரசனான பார்த்திபன் தனது மகனான விக்கிரமனுக்கு சோழ அரசு மீளவும் தனது இழந்த புகழைப் பெற வேண்டும் என்று அறிவூட்டுகின்றான்.
பல்லவ மன்னனான நரசிம்மவர்மனுக்கு கப்பம் கட்ட மறுக்கும் பார்த்திபன், பல்லவ மன்னனை வீரத்துடன் எதிர்த்து மரணமடைகின்றான். இதன் பின்னர் சோழ நாடு பல்லவரிடம் இருந்து எவ்வாறு சுதந்திரம் பெற்றது என்பதை கதை சொல்கின்றது. கதையின் பெரும் பகுதி சோழ இளவரசனான விக்கிரமன், படகோட்டி பொன்னன், பொன்னனின் மனைவி வள்ளி, சோழ சேனாதிபடி மாரப்ப பூபதி போன்றோரைச் சுற்றி நிகழ்கின்றது.
இடையிடையே சிவ பக்தர் வேசத்தில் ஒருவர் வந்து இளவரசனுக்கு உதவி செய்கின்றார். பின்னர் இந்த சிவ வேசத்தில் வந்தவர் யார்?, இதேவேளை நரசிம்மனின் நரபலி போன்றவற்றிற்கு எதிரான செயற்பாடுகளையும் கதை காட்டுகின்றது. மேலும் 63 நாயன்மார்களில் ஒருவரான பரஞ்சோதி அடிகள் அல்லது சிறுத்தொண்டர் எனப்படும் நாயனார் பற்றிய சம்பவங்களும் இடம் பெறுகின்றன.
சிறுத்தொண்டர், வாதாபி வரை நரசிம்மனின் படையை நடத்திச் சென்று புலிகேசியை அவன் தலைநகரான வாதாபியிலேயே வதம் செய்த சேனாதிபதியாவார்.
வாசகர்கள் கல்கியின் சிவகாமியின் சபதம் புதினத்தை வாசித்தபின் பார்த்திபன் கனவை வாசித்தால் சிவகாமியின் சபதத்தில் வரும் பல கதாபாத்திரங்கள் பார்த்திபன் கனவிலும் தொடர்வதை ரசிக்கலாம்.
கதை நகரும் இடத்தையும் அந்த சூழலையும் வர்ணிப்பதில் அந்த இடங்களை நம் கண் முன்னே கொண்டு வருகிறார் கல்கி. ஒரு அரசனுக்கு தன் தாய் நாட்டின் மேல் உள்ள பற்று, ஆட்சி முறைகளும் மக்களின் வாழ்வாதாரங்கலும் இதில் கூறப்பட்டுள்ளன, கதையில் வரலாற்று கதாபாத்திரங்களை சேர்த்து உண்மை சம்பவத்தை கூறுவது போல் அமைத்திருப்பது கதைக்கு பலத்தை சேர்க்கிறது. இடையிடையே கேள்விகள் எழுந்தாலும் அவற்றிற்கானா விடையை இறுதியில் கூறி திருப்திபடுத்துகிறார்.
ஒரு கதையாக மட்டும் இல்லாமல் நமது கலாச்சாரம், நமது வரலாறு மற்றும் ஒழுக்க நெறிமுறைகள் என பலவற்றையும் கூறியுள்ள இந்த புதினம் நாம் கட்டாயம் படிக்க வேண்டிய ஒன்று.
ref - wikipedia
Tuesday, February 14, 2017
அவளும் நானும்
சமீபத்தில் கேட்ட பாடல்களில் ரசிக்கும் வகையில் இருந்த பாடல்களில் இதுவும் ஒன்று. பாரதிதாசன் வரிகளில் A R ரஹ்மான் இசையில் விஜய் யேசுதாஸ் குரலில் வந்த பாடல் இது
"அவளும் நானும்
அமுதும் தமிழும்
அவளும் நானும்
அலையும் கடலும்"
என உவமை அணியில் பாடலை அமைத்திருப்பார் பாரதிதாசன். இந்த பாடலானது நாயகனும் நாயகியும் செய்யும் பயணத்தில் நாயகி தன்னுடன் இருப்பதை சந்தோசமான தருணமாக நினைத்துகொண்டு அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக இந்த பாடலை அமைத்திருப்பார் இயக்குனர். பாடலின் ஆரம்பத்தில் உள்ள இசையானது பறவைகளின் ஓசையும் காற்றின் வருடலையும் இசையோடு இணைத்திருப்பார் ரகுமான். நீங்களும் அந்த பாடலை கேளுங்கள் ரசியுங்கள்.Wednesday, February 8, 2017
Tuesday, February 7, 2017
Monday, February 6, 2017
Sunday, February 5, 2017
ஆர்வக்கோளாறு
இந்த கட்டுரை யார் மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை )
இன்று நம் நாட்டில் பல இடங்களில் அன்றாடம் பார்க்கும் ஒரு சில அறிவுஜீவிகளை பற்றிய கட்டுரை இது, ஆர்வக்கோளாறு என குறிப்பிட்டுள்ள இவர்களின் செயல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை வைத்து சுலபமாக கண்டுபிடிக்கலாம்.
➤ "உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்" என facebook இல் ஒரு போஸ்ட் வந்தால் அதன் உண்மை தன்மையை ஆராயாமல் அப்படியே ஷேர் பண்ணி அதை தேவை இல்லாமல் 4 பேருடன் tag செய்யும் அறிவாளிகள் இவர்கள்.
➤ "தமிழனா இருந்தா share பண்ணு like பண்ணு" என ஏதாவது கிறுக்கன் create பண்ணி போட்டுட்டா போதும் "தமிழன்டா" , "சிங்கம்டா" என அதை ஷேர் பண்ணி லைக் பண்ணி கொலை பண்ணும் ஆட்கள்.
➤ போராட்டம் ஊர்வலம் நடந்தால் எதற்காக நடக்கிறது அதன் தன்மை என்ன என்றெல்லாம் தெரிந்துகொள்ளாமல் கூட்டத்தில் நடுவில் சென்று selfie எடுத்துக்கொள்வார்கள், மீசை இருந்தால் அதை முறுக்கிக்கொண்டே ஒரு selfie, பிறகு facebook இல் "தமிலண்டா" "தமிலைச்சிடா" என தமிழை கொலை செய்பவர்கள்.
➤ திரைப்படங்களை பார்க்காமல் யாரோ கூறும் விமர்சனத்தை கேட்டுவிட்டு இவர்கள் படத்தை பார்த்தது போல் கழுவி ஊத்துவார்கள்.
➤ ஏதாவது ஒரு கூட்டத்தில் தல fans இருக்கீங்களா தளபதி fans இருக்கீங்களா என கேட்டால் போதும் தொண்டை தண்ணி வற்றும் வரை காரணம் இல்லாமல் கத்தும் ஜீவிகள்.
➤ நாட்டில் பேசவேண்டிய விவாதிக்கவேண்டிய பிரச்சனைகள் பல இருக்கும்போது லாஜிக்கே இல்லாத விடயத்தை கூட்டம் சேர்த்து ஆய்வுக்கு உட்படுத்துவார்கள்
➤மணிரத்னம், கெளதம் மேனன் போன்றோரின் "A" class audience படங்களை பார்க்கும்போது பாதியிலே தூங்கிவிட்டு tv விமர்சனத்தில் புகழும் பாய்ண்டுகளை எடுத்து படத்தை பற்றி நண்பர்களிடம் பேசுவார்கள் .
➤ இந்த கூட்டத்திற்கு ஒரு தலைவன், சாத்தியம் இல்லாத ஒன்றை செய்வதற்கு கூட்டம் ஒன்றை கூட்டுவர், அதில் ஆர்வம் வழிய வழிய என்ன செய்ய போகிறோம் என்றே தெரியாமல் சேரும் கூட்டம், தப்பி தவறி யாராவது கேட்டால் அவனை வேற்றுகிரகவாசியை போல் பார்ப்பார்கள் இந்த அறிவாளிகள்.
➤ இவன் மட்டும் தான் தமிழன் என்பது போல் தமிழ் மூச்சு பேச்சு என்று கூறிவிட்டு ATM இல் மொழி தேர்வு செய்வதில் ஆங்கிலத்தை தேர்வு செய்யும் உத்தமன்.
➤வியாபாரத்திற்காக "வேஷ்டி தினம்" என ஒன்றை உருவாக்கியது தெரியாமல் வேஷ்டிக்கட்டிக்கொண்டு வந்து ப்ரேமம் EFFECTஇல் ஒரு ரவுண்டு அடித்து "தமிழன்" என அலப்பறை செய்வார்கள்.
சிந்திப்போம், செயல்படுவோம்.
THAT பல்பு MOMENT
பல்பு வாங்குவது என்பது எங்கோ நடக்கும் ஏதோ ஒரு சம்பவத்தில் தேவையில்லாமல் தலையை விட்டு அசிங்கப்படும் அந்த சிறிய தருணம் "பல்பு MOMENT" ஆக மாறுகிறது.
இது போல் ஒரு சம்பவத்தை நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன் செல்போனையும் 3 பேரையும் வைத்துக்கொண்டு 2 மணிநேரத்தில் 2நிமிட குறும்படமாக இந்த "பல்பு MOMENT" ஐ கருவாக கொண்டு உருவாக்கினேன். 19 வயதில் இந்த படத்தை எடுத்தது எனக்கு ஒரு தன்னம்பிக்கையை கொடுத்தது. அந்த படத்தில் முதன்மை கதாபாத்திரம், ஒருவனை துரத்தி தன்னுடைய செல்போனை வாங்குகிறான் ஆனால் இறுதியில் வேறு மாதிரியாக சென்று அவன் "பல்பு" வாங்குகிறான் இதுவே இதன் கதை.
TITLE VAIKALA SHORT FILM
இதே போல் a moment to remember எனும் திரைப்படத்தில் 5 வது நிமிடத்தில் இதே போல் ஒரு காட்சி வரும் அதில் செல்போனிற்கு பதிலாக COOLDRINKS இடம்பெறும் அந்த காட்சியை இயக்குனர் அழகாக அமைத்திருப்பார். அந்த காட்சி கதையின் முக்கிய காட்சியாகவும் கதை நகர்வு மற்றும் உணர்ச்சிபூர்வமான கிளைமாக்ஸ் காட்சிக்கும் இந்த முதல் காட்சியை வைத்தே உருவாக்கியுள்ளார் இயக்குனர் (JOHN H. LEE) . இந்த கதையில் இது "பல்பு MOMENT " ஆக இருந்தாலும் கதைப்போக்கில் சென்று பார்க்கும்பொது உணர்ச்சிவசப்படும் வகையில் வைத்திருப்பது இயக்குனரின் சாமர்த்தியம்.
மேற்கண்ட மூன்று சம்பவங்களும் வேறு வேறு என்றாலும் ஆழ்ந்து பார்க்கும் போது கரு ஒன்றுதான் "பல்பு ".
இனி வரும் காலங்களில் காட்சிகளையோ கதைகளையோ சுடாமல் அந்த காட்சியை ரசித்து பாருங்கள் உங்களுக்கு வேறு பரிமாணத்தில் அதை விட அழகாக கிடைக்கும். மூளையை பயன்படுத்தாமல் காட்சிகளை திருடினால் இறுதியில் உங்களுக்கு கிடைப்பது "பல்பு" ஆக தான் இருக்கும்.
பார்த்ததில் பிடித்தது
சமீபத்தில் பார்த்த ஒரு குறும்படம் 'Time travel' concept ஐ வைத்து வெறும் மூன்று நிமிடங்களில் ஒரு கதையை அழகாக கூறியுள்ளனர் அதுவும் வசனம் எதுவும் இல்லாமல் மௌன மொழியில் கூறி உள்ளனர்.
கருப்புவெள்ளை நிறத்தில் படத்தில் பெரும்பகுதியாக பயன்படுத்தி சில இடங்களில் கலரை பயன்படுத்தியது படத்தின் சிறப்பு இதில் நடிகர்களின் நடிப்பு கவனிக்கும்படி இல்லை என்றாலும் தொழில்நுட்பத்தில் அதாவது படத்தொகுப்பு பின்னணி இசை படத்தின் தரத்தை உயர்த்துகிறது. பெரிய அளவில் பொருட்செலவு இல்லாமல் தரமாக ஒரு குறும்படம் எடுத்த TIMELESS .
Friday, February 3, 2017
Wednesday, January 18, 2017
movie review shawsank redemption
1994இல் வெளியான இந்த திரைப்படமானது வெளியான போது பெரிய அளவில் ஈர்க்கவில்லை, ஆனால் சில காலங்களில் இது எதிர்பாராத பாராட்டுகளை பெற்றது இந்த திரைப்படமானது உலகில் உள்ள ஊடக கலைகளை கற்பிக்கும் நிறுவனங்களில் இந்த படத்தை பற்றி பேசாமல் இருப்பதில்லை. உலகில் உள்ள சிறந்த படங்களில் பட்டியலில் இது முதல் இடம் வகிக்கிறது. பல விருதுகளையும் வாங்கியுள்ளது பிரம்மாண்டமான போர், க்ராபிக்ஸ் காட்சிகள் என எதுவும் இல்லை என்றாலும் இது உங்களுக்கு பிடிக்கும்.
ANDYயை சந்திக்கிறான். பின்பு அங்கு உள்ள சூழலை பழகுவதற்கு இவனுக்கு சில நாட்கள் ஆகிறது பிறகு andy ரெட் இடம் ஒரு சுத்தியல் வேண்டும் என்று கேட்கிறான், அதற்கு பதிலாக இவன் தனது கைக்கடிகாரத்தை கொடுக்கிறான் இடையில் ஒரு சிறையில் இடத்தில் வேலை செய்ய ஆட்களாக எடுக்கிறார்கள் இதில் red தனக்கு தெரிந்தவர்களை மட்டும் எடுக்கிறான் பின்பு அங்கு உள்ள ஒரு போலீஸ் அதிகாரிக்கு ஒரு வரி பிரச்சனையில் இருந்து அவனுக்கு உதவுவதாகவும் அதற்கு பதிலாக தனது நண்பர்களுக்கு beer வாங்கி தருமாறும் கூறுகிறான். இதனால் நண்பர்களுடன் ஒன்றாக இணைந்து விடுகிறான் பின்பு அங்கு உள்ள அதிகாரிகளுக்கு மட்டும் அல்லாமல் வேறு சிறையில் இருக்கும் அதிகாரிகளுக்கும் உதவுகிறான் இப்படியே காலங்கள் செல்கிறது காலம் கடப்பதை நடிகைகள் போஸ்டர்கள் மூலம் காட்டுவது ரசிக்கவைக்கிறது. ஒரு கட்டத்தில் அவன் மனைவியை கொலை செய்தது யார் என ஆண்டிக்கு தெரிகிறது அனால் வார்டன் அவனை வெளியே விடவில்லை ஏனெனில் ஆண்டி வெளியே சென்றால் அவர்களது வரி ஏய்ப்பு ஊருக்கு தெரிந்து விடும் என்கிற பயம் சிறையிலே அவன் 20 ஆண்டு காலம் கழிக்கிறான். இதில் Warden ஆக நடித்த Bob gunton தனது கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பின்பு சிறிது காலத்திற்கு பிறகு andy சிறையில் இருந்து தப்பிக்கிறான் அவன் எப்படி தப்பிக்கிறான். அந்த அதிகாரிகளின் நிலை என்ன ஆனது ரெட் அவனை சந்தித்ததானா என பல கேள்விகளுக்கு விடை கூறி படத்தை முடிக்கிறார் இயக்குனர் Frank Darabont.
நேர்த்தியான திரைக்கதையை அழகான வடிவில் கூறி சிறப்பான பணியை செய்திருக்கிறார் இந்த படத்திற்கு இவ்வளவு சிறப்புக்கள் இருந்தாலும் ஒரு முறைக்கு மேல் பார்ப்பது சற்று கடினம் ஆனாலும் உலகில் சிறந்த படங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த படத்தை பார்த்துவிட்டு உங்கள் கருத்தை பகிரவும்
Subscribe to:
Posts (Atom)