Wednesday, January 18, 2017

movie review shawsank redemption





                              
1994இல்  வெளியான  இந்த திரைப்படமானது  வெளியான போது  பெரிய அளவில் ஈர்க்கவில்லை, ஆனால்  சில காலங்களில்  இது எதிர்பாராத  பாராட்டுகளை  பெற்றது இந்த திரைப்படமானது உலகில் உள்ள ஊடக  கலைகளை கற்பிக்கும் நிறுவனங்களில் இந்த  படத்தை பற்றி பேசாமல் இருப்பதில்லை.  உலகில் உள்ள சிறந்த  படங்களில் பட்டியலில் இது முதல் இடம் வகிக்கிறது. பல விருதுகளையும் வாங்கியுள்ளது  பிரம்மாண்டமான  போர், க்ராபிக்ஸ் காட்சிகள் என எதுவும்  இல்லை என்றாலும் இது உங்களுக்கு பிடிக்கும்.
             படத்தில் கதாநாயகன் ANDY(Tim  robbins ) இவர் 1947 இல் தன்  மனைவியை கொலை செய்தார்  என குற்றம் சுமத்தப்பட்டு SHAWSANK சிறையில்  தள்ளப்படுகிறான்  அங்கு தான்  RED(morgan  freeeman )

  ANDYயை  சந்திக்கிறான்.  பின்பு  அங்கு உள்ள சூழலை  பழகுவதற்கு  இவனுக்கு சில நாட்கள்  ஆகிறது பிறகு andy  ரெட் இடம் ஒரு சுத்தியல்  வேண்டும் என்று கேட்கிறான், அதற்கு  பதிலாக  இவன் தனது கைக்கடிகாரத்தை  கொடுக்கிறான் இடையில் ஒரு சிறையில்  இடத்தில்   வேலை செய்ய ஆட்களாக எடுக்கிறார்கள்  இதில் red  தனக்கு தெரிந்தவர்களை மட்டும் எடுக்கிறான் பின்பு  அங்கு உள்ள ஒரு போலீஸ் அதிகாரிக்கு  ஒரு  வரி  பிரச்சனையில்  இருந்து அவனுக்கு உதவுவதாகவும் அதற்கு பதிலாக தனது நண்பர்களுக்கு beer  வாங்கி தருமாறும் கூறுகிறான். இதனால் நண்பர்களுடன் ஒன்றாக இணைந்து  விடுகிறான் பின்பு அங்கு உள்ள அதிகாரிகளுக்கு மட்டும் அல்லாமல் வேறு சிறையில் இருக்கும்  அதிகாரிகளுக்கும் உதவுகிறான் இப்படியே காலங்கள் செல்கிறது காலம் கடப்பதை  நடிகைகள் போஸ்டர்கள்  மூலம் காட்டுவது  ரசிக்கவைக்கிறது. ஒரு கட்டத்தில் அவன் மனைவியை கொலை செய்தது யார் என ஆண்டிக்கு  தெரிகிறது அனால் வார்டன் அவனை வெளியே விடவில்லை ஏனெனில் ஆண்டி வெளியே சென்றால் அவர்களது வரி ஏய்ப்பு ஊருக்கு தெரிந்து விடும் என்கிற பயம் சிறையிலே அவன் 20 ஆண்டு  காலம் கழிக்கிறான்.  இதில் Warden ஆக  நடித்த Bob gunton தனது கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். 
 பின்பு சிறிது காலத்திற்கு பிறகு andy  சிறையில் இருந்து தப்பிக்கிறான் அவன் எப்படி  தப்பிக்கிறான். அந்த அதிகாரிகளின் நிலை என்ன ஆனது ரெட் அவனை சந்தித்ததானா   என  பல கேள்விகளுக்கு விடை கூறி படத்தை முடிக்கிறார் இயக்குனர்  Frank Darabont.          
          நேர்த்தியான திரைக்கதையை அழகான வடிவில் கூறி சிறப்பான பணியை செய்திருக்கிறார் இந்த படத்திற்கு இவ்வளவு சிறப்புக்கள் இருந்தாலும் ஒரு முறைக்கு மேல் பார்ப்பது சற்று கடினம் ஆனாலும் உலகில் சிறந்த படங்களில் இதுவும் ஒன்றாகும்.  இந்த படத்தை  பார்த்துவிட்டு  உங்கள் கருத்தை பகிரவும்  


No comments:

Post a Comment