Sunday, February 5, 2017

THAT பல்பு MOMENT

                         





                                    பல்பு வாங்குவது என்பது எங்கோ நடக்கும் ஏதோ ஒரு சம்பவத்தில் தேவையில்லாமல் தலையை விட்டு அசிங்கப்படும் அந்த சிறிய தருணம் "பல்பு MOMENT"  ஆக மாறுகிறது.

இந்த "பல்பு MOMENT"  வாங்கும் சமயத்தில் பெரும்பாலும்  அது நம்மோடே போய்விடுகிறது, உதாரணமாக "மச்சான்" என்று ஒரு சத்தம் தூரத்தில் இருந்து வரும். நம்மை தான் கூப்பிடுகிறான் என்று நாம் அங்கு செல்லும்போது அவன் வேறு யாரையோ கூப்பிட்டு பேசிக் கொண்டு இருப்பான், அப்போது நம் தலை மேல் ஒரு லைட் எரியும், இந்த சம்பவம் யாருக்கும் தெரியாமல் நம்மோடே  போய்விடுகிறது.
                     இது போல் ஒரு சம்பவத்தை நான்  இரண்டு ஆண்டுகளுக்கு முன் செல்போனையும்  3 பேரையும் வைத்துக்கொண்டு  2 மணிநேரத்தில்   2நிமிட குறும்படமாக  இந்த "பல்பு MOMENT" ஐ  கருவாக கொண்டு உருவாக்கினேன். 19 வயதில் இந்த படத்தை எடுத்தது எனக்கு ஒரு தன்னம்பிக்கையை கொடுத்தது. அந்த படத்தில் முதன்மை கதாபாத்திரம்,   ஒருவனை  துரத்தி தன்னுடைய செல்போனை வாங்குகிறான் ஆனால்  இறுதியில் வேறு மாதிரியாக சென்று அவன் "பல்பு" வாங்குகிறான் இதுவே இதன்  கதை.


TITLE VAIKALA SHORT FILM


இதே போல் a moment to remember எனும் திரைப்படத்தில் 5 வது நிமிடத்தில் இதே போல் ஒரு காட்சி வரும் அதில் செல்போனிற்கு பதிலாக COOLDRINKS  இடம்பெறும் அந்த காட்சியை இயக்குனர் அழகாக அமைத்திருப்பார். அந்த காட்சி கதையின் முக்கிய  காட்சியாகவும்  கதை நகர்வு மற்றும் உணர்ச்சிபூர்வமான கிளைமாக்ஸ் காட்சிக்கும் இந்த முதல் காட்சியை  வைத்தே உருவாக்கியுள்ளார் இயக்குனர் (JOHN H. LEE) . இந்த கதையில் இது "பல்பு MOMENT " ஆக இருந்தாலும் கதைப்போக்கில் சென்று பார்க்கும்பொது உணர்ச்சிவசப்படும் வகையில் வைத்திருப்பது இயக்குனரின்  சாமர்த்தியம்.

           


     தமிழில் (எனக்கு 20 உனக்கு 18)  திரைப்படத்திலும் இதே போன்று ஒரு காட்சி இடம்பெறும்,  அதிலும் 5வது நிமிடத்தில் தான். அதில் கதாநாயகன் தான் படிக்கச் கொண்டு வந்த புத்தகத்தை திரிஷா படித்து கொண்டு இருப்பார், அதை கண்டு அதிர்ச்சி அடையும் அவர் பின்பு தனது பையில் அந்த புத்தகத்தை எடுப்பார். இதில் கதாநாயகன் "பல்பு" வாங்கியிருந்தாலும் ஹீரோ, ஹீரோயின்   இருவருக்கும் ஒரே டேஸ்ட் என கூற முயற்சித்திருக்கிறார் இயக்குனர்.

                                           

   மேற்கண்ட மூன்று சம்பவங்களும் வேறு வேறு என்றாலும் ஆழ்ந்து பார்க்கும் போது கரு  ஒன்றுதான் "பல்பு ".
இனி வரும் காலங்களில் காட்சிகளையோ கதைகளையோ  சுடாமல் அந்த காட்சியை ரசித்து பாருங்கள் உங்களுக்கு வேறு பரிமாணத்தில் அதை விட அழகாக கிடைக்கும். மூளையை பயன்படுத்தாமல் காட்சிகளை திருடினால் இறுதியில் உங்களுக்கு கிடைப்பது "பல்பு" ஆக தான் இருக்கும்.

No comments:

Post a Comment